அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில், சிவகாசி - 626 123.


life general mutual share

சிவகாசி சிவன் கோவிலில் நடைபெறும் பூஜைகள்

பௌர்ணமி பூஜை

ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் அம்பாளுக்கு ஆராதனை செய்யப்பட்டு பின்னர் அர்ச்சனை செய்து, அலங்காரம் தீப ஆராதனை நடைந்தேறிய பிறகு பிரசாதம் வழங்கப்படும்.


பிரதோச பூஜை

பிரதோச நாளில் நந்தியெம்பெருமனுக்க புனிதநீராட்டு (அபிஷேகம்), அலங்காரம், ஆராதனை செய்யப்படுகிறது. மேளவாத்திய சிவபுராண துதிப்பாடல் நாம சங்கீர்தனதுடன் விசாலாட்சி சமேத விஸ்வநாத பெருமான் நந்தி வாகனத்தில் உட்பிரகாரத்தை மும்முறை வலம் வரச் செய்து சிவபெருமான் சன்னதிக்கு எதிரே உள்ள அருள்மிகு நந்தியெம்பெருமான் முன்னிலையில் அமரச் செய்து பிரதோஷ காலத்தில் இருவருக்கும் ஒரே சமயம் தீப ஆராதனை நடைபெறுகிறது.


கார்த்திகை பூஜை

ஆடிக் கார்த்திகை, தைக் கார்த்திகை நாட்களில் திருமுருகப் பெருமானுக்கு அபிஷேக அலங்கார தீப ஆராதனை நடைபெறுகிறது. திருக் கார்த்திகையன்று இரவில் விசாலாட்சி சமேத விஸ்வநாத பெருமான் முருகப் பெருமானுடன் ரதவீதிகளில் வலம் வர ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்நன்நாட்களில் மூவரும் உலா வந்து சேர்ந்ததும் ஆலயத்தின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிவபெருமான் திருவண்ணமலையில் நெருப்பாக நின்ற காட்சி நினைவுபடுத்தப்படுகிறது. அன்று ஆலயத்தினுள் கோடித்தீபம் ஏற்ற ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.


1008 திருவிளக்கு பூஜை

ஆடி வெள்ளி, தை வெள்ளி நாட்களில் அருள்மிகு விஸ்வநாத சுவாமிக்கும் விசாலாட்சி அம்மனுக்கும் திருவிளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்வது கண்கொள்ளக் காட்சி ஆகும்.


108 சங்காபிஷேக பூஜை

ஒவ்வொரு தமிழ் மாதக் கடைசித் திங்கட்கிழமையில் அருள்மிகு விஸ்வநாதப் பெருமானுக்கும், மாதக் கடைசி வெள்ளி கிழமையில் அம்பாளுக்கும் 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

கார்த்திகை மாதம் கடைசி சோமவாரம் அன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.


தங்கக்கவசம் சாற்றுதல்

ஒவ்வொரு தமிழ் மாத முதல் நாளும் அனைத்து பிரதோஷ நாட்களிலும் மற்றும் சிவராத்திரி அன்றும், சிறப்பு விழாக்காலங்களிலும் விஸ்வநாத சுவாமிக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.


அனைத்து பூஜை விபரங்கள்

 • கந்த ஷஷ்டி பூஜை
 • மாத சிவராத்திரி பூஜை
 • அஷ்டமி பைரவர் பூஜை
 • சங்கடஹர சதுர்த்தி பூஜை
 • மாத தேவ அஷ்டமி பூஜை
 • மகா சிவராத்திரி பூஜை
 • வைகாசி பிரம்ம உற்சவம்
 • ஆனிப் பெருந்திருவிழா
 • ஆனி 2 - ஆனித் தேரோட்டம்
 • ஆடிப்பூரத்திருவிழா
 • ஆவணித்திருவிழா
 • புரட்டாசி 3 - நவராத்திரி
 • ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்
 • கார்த்திகை - திருக்கார்த்திகை தீபம்
 • கார்த்திகை 5 - தேவ அஷ்டமி மகா பைரவர் பூஜை
 • மார்கழி 1 - திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்)
 • பங்குனி உத்திரம்

Home | History | Services | Contact us

Poojas | Festivals | Annadhanam | Administration | Gallery

Arulmigu Viswanatha Swamy Temple - Sivakasi | Maintained by Maharaj Computers