அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில், சிவகாசி - 626 123.


சிவகாசி சிவன் கோவிலின் புகைப்படப் பகுதி

வில்வமரம் நடுதல் விழா

தமிழ்நாடு அரசு சார்பில் 24 பிப்ரவரி 2015 முற்பகல் 11.15 மணிக்கு உயர்திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் முன்னிலையில் ''மாபெரும் மரம் நடவு'' திட்டத்தின் கீழ் அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் வில்வ மரக்கன்று நடுதல் விழா கொண்டாடப்பட்டது. மேலும் அவர் கோவிலின் புதுப்பிக்கப்பட்ட சிவகங்கைத் தீர்த்தத்தையும் பார்வையிட்டார்.

1008 சங்காபிஷேகம்

கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தன்று 1008 சங்காபிஷேகம் மிகச் சிறப்பாக நமது அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மழை நீர் சேகரிப்பு திட்டம்

அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் தமிழக அரசு ஆணைப்படி மழை நீரை சேகரிக்க கோவில் முழுவதும் மழை நீர் சேகரிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலின் கிழக்குப் பிராகாரத்திற்கு சென்றால் இடதுபுறம் சிவகங்கைத் தீர்த்தத்தின் நுழைவாயில் அமைந்துள்ளது. தீர்த்தம் கோவிலுக்குள் பெய்யும் மழைநீரால் நீரம்புகின்றது. அதன் உட்புறம் ஒரு கிணறும் அமைந்துள்ளன.

கோவில் தேர்

Home | History | Services | Contact us

Poojas | Festivals | Annadhanam | Administration | Gallery

Arulmigu Viswanatha Swamy Temple - Sivakasi | Maintained by Maharaj Computers