அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில், சிவகாசி - 626 123.


life general mutual share

சிவகாசி சிவன் கோவிலில் நடைபெறும் மாத திருவிழாக்கள்

மாதம் திருவிழா
சித்திரை சித்ரா பௌர்ணமி திருவிழா
வைகாசி பிரம்ம உற்சவத் திருவிழா - 10 நாட்கள் அருள்மிகு சுப்ரமணியன் வள்ளி தேவனை சன்னதியிலுள்ள முருகனுக்கு விசாகத் திருவிழா நடைபெறும்.
ஆனி திருமஞ்சன திருவிழா - அருள்மிகு நடராஜருக்கு திருமஞ்சன பூஜை மற்றும் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
ஆடி தபசுத் திருவிழா - அருள்மிகு விசாலாட்சி அம்மனுக்கு 14 நாட்கள் நடைபெறும்.
கார்த்திகைத் திருவிழா - முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படுகிறது.
ஆவணி மூலத் திருவிழா (பிட்டுத் திருவிழா) - 10 நாட்கள் அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெறும்.
புரட்டாசி நவராத்திரி திருவிழா - கொலு மண்டபதில் 10 நாட்கள் நவராத்திரி கொலு பூஜை கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி கந்த சஷ்டி திருவிழா - திருமுருகப்பெருமனுக்கு அபிஷேக அர்ச்சனையுடன் சூரசம்ஹாரம், திருகல்யாணம் 7 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
கார்த்திகை திருக்கார்த்திகைத் திருவிழா
மார்கழி திருவாதிரைத் திருவிழா - இந்தத் திருநாளில் நடராஜருக்கு அபிஷேக அலங்காரத்துடன் ஆருத்திரா தரிசனம், பூந்தேரில் உலா வருதல், ஐயப்பன் சன்னதி சிறப்பு மண்டல பூஜை வழிபாடு, திருப்பாவை - திருவெம்பாவை திருவிழா போன்ற திருவிழாகள் மிக விமர்சையாக கொண்டாடப்படும்.
தை தைப்பூசத் திருவிழா - திருமுருகனுக்கு பால்குட விழா - கார்த்திகைத் திருவிழா போன்றவை அருள்மிகு முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படுகிறது.
மாசி சிவராத்திரி பெருவிழா - காலையில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், இரவு நகர்வலம், 5 ஜாம பூஜை, சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
பங்குனி உத்திரத் திருவிழா - திருமுருகப்பெருமனுக்கு பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது

Home | History | Services | Contact us

Poojas | Festivals | Annadhanam | Administration | Gallery

Arulmigu Viswanatha Swamy Temple - Sivakasi | Maintained by Maharaj Computers